கொங்கு வேளாளர் சமுதாய வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிப்பது குலங்களே. குலங்களைக் கூட்டம், கோத்திரம் என்றும் அழைப்பர். மூன்றும் ஒரே பொருள் தருவன. குலக்காணி, குலதெய்வம், குலகுரு குலப்புலவர் எனக் குலத்தில் அடையாளத்தோடு அழைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.அறிமுகம் ஆகாத இரு கொங்கு நண்பர்கள் சந்திக்கும் போது அநேகாகக் கேட்கும் முதல் கேள்வி ‘நீங்க என்ன கூட்டமுங்க’ என்பதாகத்தான் இருக்கும்.
ஒரே கூட்டமாக இருந்தால் வயதிற்கேற்ப தந்தை-மகன்; அண்ணன்-தம்பி உறவு கொண்டாடுவதும், வேறு கூட்டமாக இருந்தால் மாமன், மைத்துணனாக உரிமை கொண்டாடுவதும் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கேயுள்ள தனிப்பண்பாட்டு அடையாளமாகும்.திருமணத்திற்கு மணமக்களோ, மணமகனோ தேடும் போது முதலில் விசாரிப்பது குலத்தைப் பற்றியே. ஒரே குலத்தில் பெண் எடுப்பதும், கொடுப்பதும் கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை. அயல் குலத்திலேயே திருமண உறவு கொள்வர்.
பொருளடக்கம்
[மறை]- 1 காணி - ஆட்சி
- 2 குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- 3 இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன
- 3.1 அந்துவகுலம்
- 3.2 ஆந்தை குலம்
- 3.3 ஈஞ்சகுலம்
- 3.4 ஒழுக்ககுலம்
- 3.5 ஓதாள குலம்
- 3.6 கணக்கன்குலம்
- 3.7 கண்ணந்தை குலம்
- 3.8 கண்ணகுலம்
- 3.9 காடைகுலம்
- 3.10 காரிகுலம்
- 3.11 குழாயர் குலம்
- 3.12 கூறைகுலம்
- 3.13 சாத்தந்தை குலம்
- 3.14 செகன்குலம்
- 3.15 செங்கண்ணன்குலம்
- 3.16 செம்பகுலம்
- 3.17 செம்பூத்தன்குலம்
- 3.18 செல்லகுலம்
- 3.19 செவ்வாயர் குலம்
- 3.20 சேகர் குலம்
- 3.21 சேவடி குலம்
- 3.22 தனஞ்செயன் குலம்
- 3.23 தூரகுலம்
- 3.24 தேர்வேந்த குலம்(தேவேந்திர குலம்/ தேவாத்தை)
- 3.25 தோடைகுலம்
- 3.26 பண்ணை குலம்
- 3.27 பயிரகுலம்
- 3.28 பவள குலம்
- 3.29 பனங்காடை குலம்
- 3.30 பாண்டியன் குலம்
- 3.31 பில்ல குலம்
- 3.32 பூச குலம்
- 3.33 பெரிய குலம்
- 3.34 பெருங்குடி குலம்
- 3.35 பொருளந்தை குலம்
- 3.36 பொன்னகுலம்
- 3.37 மணியன்குலம்
- 3.38 விலையகுலம்
- 3.39 வெண்டுவன் குலம்
- 3.40 அந்துவகுலம்
காணி - ஆட்சி
ஒவ்வொரு குலங்களுக்கும் காணியூர்கள் வகுக்கப்பட்டன. இதனைப்பட்டயம் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்கடி பன்னீராயிரம் என்றும் “குல கோத்திரங்கள் பிரித்து நாடு 24 நாட்டார் என்றும் இந்தக் குலங்களை ஊருக்கெல்லாம் குல தெய்வங்களும் காணி பூமிகளும் பிரித்து” என்று கூறுகிறது. ஒரு குலத்துக்குச் சொந்தமான உரிமையுடைய ஊர் காணி எனப்படும். காணி என்ற சொல்லுக்கு ஆட்சி, அனுபவிக்கும் உரிமை என்று பொருள். ஓர் ஊர்க் காணியுடையவர் காணியாளர் அல்லது காணியாளக்கவுண்டர் எனப்படவார்.ஒரு குலத்துக்குச் சொந்தமான உரிமையுடைய ஊர் காணி எனப்படும். காணி என்ற சொல்லுக்கு காணியாளர்கள் அந்த ஊரை நிர்வாகம் செய்வர். வரி வசூல் செய்து அரசு அதிகாரிகளுக்குச் செலுத்துவர். கோயில் முதல் உரிமை பெறுவர். எல்லாக் குடிமக்களையும் ஏவல் கொள்ளும் உரிமை அவர்கட்கு உண்டு. இதனை முகுந்த நல்லூர்ப் பட்டயம் பின்வருமாறு கூறுகிறது
“ஆண்ட சொர்னாதாயம் நஞ்சை புஞ்சை பட்டி தொட்டி மாவடை மரவடை புறகூலி பிறமுதல் அணை அச்சுக்கட்டு மக்க மகமை சுங்கம் சோதினை எல்லை கொல்லை இதுவெல்லாம் செல்லும் சதுர்பூமியை மரியாதைக்குள்ள விபூதி பிரசாதம் பச்சடம் பாக்கு இதுவெல்லாம் செல்லும் சதுர்பூமியை மரியாதைக்குள்ள விபூதி பிரசாதம் பச்சடம் பாக்கு வெத்திலை இதுவெல்லாம் முதலானது கொடுத்து” காணி பெற்றதைக் கூறுகிறது.
“கோயில் காணியுடைய சிவப்பிராமணர், தச்சாசார்யக் காணியுடைய ஆசாரியர், பாடவ்யக் காணியுடைய நாகபாசத்தார்” என்று காணிகள் பலவகைப்படும்.
குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. முன்பு கொங்கு வேளாளர் குலங்கள் 60 என்றனர். கொங்கு காணியான பட்டயம் கொங்கு வேளாளர் குலங்கள் 124 என்று கூறுகிறது. .பரமயணப்புலவர் பாடிய ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சி 142 குலங்களைக் குறிக்கிறது. குலங்களின் பெயர்கள் தனியாகவும் தொகுத்தும் பல இடங்களில் கூறப்படுகிறன்றன. எ பெரும்புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக்கவுண்டர் தேடிக்கண்டுபிடித்த 96 கீர்த்திப்பாடல்.
எ சின்னத்தம்பி நாவலர் ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சி.
எ முதலிபாளையம் மகாவித்துவான் நாச்சிமுத்துப் புலவர் பாடிய வேளாளர் குலகும்மி,
எ தம்மரெட்டிபாளையம் நாச்சிமுத்துப் புலவர் வீட்டில் கிடைத்த கொடுமணல் இலக்கியங்கள் ஏடு.
எ கொங்கு வேளாளர்களின் கல்வெட்டு, செப்பேடு.
எ மூன்று கொங்குமண்டல சதகங்கள்.
அனைத்தையும் தொகுத்து அகரவரிசைப்படுத்தியதில் குலங்களின் எண்ணிக்கை 214 வருகிறது. 96 கீர்த்திப் பாடலில் சில குலங்களின் பெயர் ஐயத்திற்கு இடமாக இருந்தாலும் ஆவணத்திற்கு மதிப்பளித்து அவைகளும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. செப்பேடு கல்வெட்டுக்களில் வேறு எங்கும் காணப்பெறாத பல குலப்பெயர்கள் வருகின்றன. அளிக்கப்பட்டுள்ள விளக்கப் பட்டியலில் அவைகளைக் காணலாம். சுமார் 30 குலங்களே ஆறு ஆவணங்களிலும் முழுமையாக இடம் பெற்றுள்ளன. குலங்களின் வீழ்ச்சி, மறைவு, தொடர்ச்சி ஆகியவைகளைப் பட்டியல் காட்டுகிறது.
குலங்களின் பெயர்களை
முனைவர் கிருஷ்ணசாமி
டி.எம்.காளியப்பா
புலவர். வி. இராமமூர்த்தி
நல் நடராசன்
புலவர் தே.ப.சின்னுசாமி
புலவர் இரா. வடிவேலனார்
கு. சேதுராமன்
முனைவர் திலகவதி பழனிசாமி
இரா. இரவிக்குமார்
கே.எஸ்.மோகனசுந்தரம்
கவிஞர் சிவதாசன்.
ஆகியோர் தொகுத்துக் கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.குலங்களின் பெயர்காண்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. அலகுமலைக் குறவஞ்சியைப் பாடுவித்தவள்ளல் ஓதாளர் குலத்தைச் சேர்ந்தவர். அந்நூலில்தான் குலப் பெயரைத் தொகுத்துக் கூறும் பாடல் வருகிறது.
“பொன்னார் ஓதாளர் பூசர் செம்பூதர்”
என்று அந்த நீண்ட அகவல தொடங்குகிறது. ஆய்வாளர் ஒருவர் பொன்னர் வந்தால் தம்பி சங்கர் வரவேண்டும் என்று நினைத்துள்ளார். அந்த முதல்வரியை, பொன்னர் சங்கர் பூசர் செம்பூதர் என்று மாற்றிப்பதிப்பித்தள்ளார். அப்பாடலைப் பாடுவித்த ஓதாள குலமே அப்பாடலில் இல்லை என்பதுதான் வியப்பான செய்தி.அலகுமலைக் குறவஞ்சி மூல நூலைப் பார்க்காமல் மேற்கண்ட நூலைப்பார்த்த பல ஆய்வாளர்கள் ஓதாளருக்குப் பதில் தம்பி சங்கர் என்பதைக் குலப் பெயராகச் சேர்த்துள்ளனர். ஒரவர் அப்பெயரை கல்வெட்டில் கண்டதாகவும் கூறுகிறார்.
ஒரு நூலில் பூச்சந்தை என்ற பெயர் பிழையாக நச்சந்தை என்று அச்சாகி விட மற்றொருவர் அதைப்பார்த்து நச்சந்தையை தனிக்குலமாக்கி நான்கு ஊர்களையும் காணியாகக் கொடுத்துக் காணிப்பாடலாகத் தனிப்பாடலும் பாடிவிட்டார். பொருளந்தை பொருள்தந்தான், பேரிழந்தான், பெரழந்தை, பிறளந்தை, முழுக்காதன் அனைத்தும் ஒரே குலம். கல்வெட்டும், செப்பேடம் முழுக்காது பொருளந்தை என்றே கூறுகிறது. ஒரே கூட்டத்தை நான்காகக் கொண்டுள்ளனர். காடை, காடான்,சாகாடை மூன்றும் ஒரே குலம்தான். இதனையும் மூன்றாகக் கொண்டு எழுதியுள்ளனர். வெண்டுவன் கூட்டத்தை வெண்டு உழவர் என்று டி.எம்.காளியப்பா கூறுவார். சாத்தந்தை, கண்ணந்தை, பொருளந்தை என்பதை சாத்தாந்தை, கண்ணாந்தை, பொருளாந்தை எனக்கொண்டு ஆந்தை குலத்தோட தொடர்புபடுத்துவர் சிலர். இக்குழப்பங்களைத் தெளிவுபடுத்தினால் தனி நூலாகவே அமையும். மாதிரிக்காக இரண்டொன்றை மட்டும் காட்டப்பட்டது.
இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன
இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன. அவை கொங்கு வேளாளப் பெருமக்களால் நன்கு ஆதரிக்கப்பட்ட புலவர்களால் பாடப்பட்டவை. அப்பாடல்களில் இந்தக் காணியூர்களைக் காணியாளர்கள் ஆட்சி செய்வதாகவே கூறப்படுகின்றன.
“அரசுபுரி காணியிவையே”“இவை பதியில் அரசுபுரியும்”“பொன்னின்மேழிக்கதிபர் பூமி பாலகரானவர் புகழ்பெருகு காணியி வையே”
என்ற பகுதிகள் அதனை விளக்கும். கொங்கு வேளாளர் காணி என்பது ஊரின் முழு உரிமையுடையதாகும்.இந்தக் காணிப்பாடல்கள் இரண்டு விதமான அமைப்பில் காணப்படுகின்றன. ஒன்று குலப்பெயரைக் கூறி அக்குலத்தார் காணியுரிமை கொண்ட ஊர்களைத் தொகுத்துக் கூறுவது. மற்றொன்று ஒரு குலத்தில் தோன்றிய ஒரு தலைவரைக் கூறி அவர் இக்குலத்தின் இந்த ஊர்களுக்கெல்லாம் காணியுரிமையுடையவர் என்று கூறுவது.
அந்துவகுலம்
காணி ஊர்கள்:
நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர், மோடமங்கலம், அஞ்சூர் பாலமேடு, தூரம்பாடி,
திருச்செங்கோடு, அந்தியூர், லக்காபுரம், தோட்டாணி, செவியூர், வாய்ப்பாடி, முடுதுறை,
திருவாச்சி, கொடையூர், ஊஞ்சலூர், பூந்துறை, தெக்கலூர், சேவூர், குன்னத்தூர் ஆகிய
இருபத்தொரு ஊர்கள்.
காணிப்பாடல்:
சீருலவு நாகநகர் கீரனூர் ஆதியூர்
செப்பரிய மோடமங்கை
திகழ்அஞ்சி யூர்பாலை மேடுதூ ரம்பாடி
சித்திரவீதிக் கோதையூர்
ஏருலவு வடகரை நன்னாட்டில் அந்தியூர்
இனியலக் காபுரமுடன்
எழில்பரவு தோட்டாணி மேவுசெவி யூருடன்
இனிதான வாய்ப்பாடியூர்
காருலவு முடுதுறை நன்னகர் திருவாச்சி
கனககொடை யூருமிகவும்
காவேரி சூழுமேல் அரையநன் னாட்டினில்
கதிபெருகும் ஊஞ்சலூரும்
ஆரமணி மேடை திகழ் பூந்துறைசை தெக்கலூர்
அதிகசே வூருகுன்றை
அந்துவ குலத்தில்வரு மோழைசெல்லப்பனே
அடையவர்கள் பணிசிங்கமே!
அந்துவ குலத்தின் மற்றொரு காணிப்பாடல் குந்தாணி, குந்தாணி ஆகிய
ஊர்களும் அந்துவகுலக் காணியூர்கள் என்று கூறுகிறது.
காணிப்பாடல் – 2:
நன்னிலம் புகழ்கின்ற நாகம்பள்ளி கீரனூர்
நற்பால மேடு அதுவும்
நளினமுள லக்கா புரத்துடன் திருவாச்சி
நலகுந்தி ஆதியூரும்
சென்னெல்வயல் சூழ்நிலை மோடமங் கலமதும்
செழித்ததூ ரம்பாடியும்
செயமருவு அஞ்சியூர்ப் பதியுடன் மிக்கவாம்
செப்பமுள காணிபெற்றாய்
சொன்னமொழி தவறாக அந்துவ குலத்தில்வரு
சுகசரண கெம்பீரனே
சுந்தர மடந்தையர்கள் விரதமத ரூபனே
சொற்பனுட மகமேருவே
தன்மையது வாகவே நம்புலவன் என்று நீ
தாபரித் திடும்பவுளித்
தாட்டீக சென்னியருள் செல்லமகி பாலனே
தாடளர் பரிநகுலனே
காணி ஊர்கள்:
ஆந்தை குலம்
காணியூர்கள்
கொன்னையார், முத்தூர், பருத்தியூர், மாணிக்கம்பாளையம், தூரம்பாடி, எதிரனூர்,
பட்டணம், பாலைமேடு, சென்னிமலை, வயிரூசி, தோழூர், பிடாரியூர், திண்டமங்கலம்,
மருதுறை, திருவாச்சி, வள்ளியறச்சல், மோரூர், வெள்ளகோயில், விண்ணப்பள்ளி,
கிருதநல்லூர், காகம், கூத்தம்பூண்டி, குந்தாணி, சடையகுளம், ஒடுவங்குறிச்சி, மாம்பாடி,
முறங்கம், நல்லூர், புத்தூர், கரியாளங்குளம், பொன்பரப்பி பாலை நகர், சிறுக்கிணறு
கொற்றனூர் ஆகிய முப்பத்து நான்கு ஊர்கள்.
காணிப்பாடல்
பன்னுதமி ழாகரன் ஆந்தைகுல மரபாளர்
பதிகொன்னை யாருமுத்தூர்
பருத்தியூர் மாணிக்கம் தூரை நகர் எதிரனூர்
பட்டணம் பாலைமேடு
சென்னிகிரி வயிரூசி தோழூர் பிடாரியூர்
திண்டமங்க கலம்மருதுறை
திருவாச்சி வள்ளிநகர் மோரூரு வெள்ளக்கல்
சிறந்தவிண்ணப்பள்ளியும்
மன்னுபுகழ் மேவும் கிருத நல் லூர்காகம்
மருவுகூத் தம்பூண்டியும்
வளமான குந்தாணி சடையகுளம் மிகுசெல்ல
மானஓடு வங்குறிச்சி
துன்னுமாம் பாடி முறங்கநாச் சார்துகில்
தோறாத புத்தூருடன்
துய்யகரி யான்குளம் பொன்பரப்பி பாலைநகர்
சிறுக்கிணறு கொற்றனூரே.
வயிரூசிக்கு வடுகநகர் என்றும் தூரைக்கு காவிரை என்ற பாட வேறுபாடுகள் உள்ளன.
ஆந்தை குலத்தாரின் மற்றொரு காணிப்பாடல் பரமத்தி, காளமங்கலம், முருங்கத்தொழு,
கருவூர், முன்னூர், கீரனூர், தென்னமங்கலம், திருச்செங்கோடு, முளசி, செம்பியநல்லூர்,
தேனூர், ஊத்துக்குழி, ஊதியூர், ஆலத்தூர், முருங்கமங்கலம், காஞ்சிக் கோயில், ராயகுளம்,
மானூர், குளத்தூர், ஆதியூர், தூசியூர், அத்தனூர், ஆரியூர், ஆவணிப்பேரூர், ஊத்தலூர்,
அருமணநல்லூர், அனுமன்பள்ளி ஆகிய ஊர்களும் ஆந்தை குலத்தார் காணியூர்கள் என்று
கூறுகிறது.
காணிப்பாடல் – 2
நீதிசேர் வள்ளிநகர் பரமுத்தி வெள்ளக்கல்
நிகர்சடைய குளம்மருதுறை
நேர்பட்டணம்காள மங்கைமுருங் கைத்தொழு
நீளவண் பள்ளிகருவூர்.
தீதிலா முத்தனூர் முன்னூர் கீரனூர்
தென்னவன் மங்கைமோரூர்
திருவாச்சி யூர்புத்தூர் காகம்திண்டமங்கை
திருச்செங் கோடுதோழுர்
ஓதும் பிடாரியூர் பருத்தியூர் குந்தாணி
ஓடுவன் குறிச்சிமுளசை
உற்றசெம் பியநலூர் கதிரநல் லூர்எதிர
னூர்பாலை மேடுதேனூர்
போதில்ஊ ற்றுக்குழி மாவண்விண் ணப்பள்ளி
பொன்னூதி கிரிகொற்றையூர்
புகழ்ஆலத்தூர்முருங் கமங்கைமா ணிக்கநகர்
புதியகாஞ் சிக்கோயிலும்
கோதில் கூத்தம்பூண்டி வடுகநகர் ராயகுளம்
கொண்டபெயர் விளங்குமங்கை
குலவுகரி யான்குளம் காக்கைதூ ரம்பாடி
கூறும்மா னூர்குளத்தூர்
ஆதியூர் தூசியூர் அத்தனூர் ஆரியூர்
ஆவணிகொள் பேர்ஊற்றலூர்
அருமணநல் லூர்கொற்றை அனுமநகர் காணிகொளும்
ஆந்தைகுல வேளிர்குலமே.
ஈஞ்சகுலம்
காணிஊர்கள் :
பூந்துறை, வெள்ளோடு, பரஞ்சேர்வழி, பிடாரியூர், மண்ணறை, ஈங்கூர், பழனி, வாகரை,
பொருளூர் ஆகிய ஊர்கள் ஈஞ்சண்குலக் காணியூர்கள்.
காணிப்பாடல் :
பூந்துறையும் வெள்ளோடு புகழ்பரஞ் சேர்வழியும்
வாய்ந்த பிடாரியூர் மண்ணறையும் - சேர்ந்தபுகழ்
ஈஞ்சூர் பழனியூர் வாழ்கரையும் நீள்புலரி
ஈஞ்சகுலக் காணி இது.
மிகவும் சிதைந்த மற்றொரு காணிப்பாடல் தொட்டியம், பவித்திரம், முசிறி, வில்லிபுத்தூர்,
தெங்கூர், புகலூர், வடகரையாத்தூர், கொந்தளம், குன்னத்தூர், பரமத்தி, முத்தூர்,
பருத்திப்பள்ளி, நீலம்பூர், பாலைமேடு, குளித்தலை, இராசிபுரம், ஆவலூர், வீரப்பூர், மல்லூர்,
ஒடும்பறை, மோரூர், முளசி, ஈஞ்சம்பள்ளி, அஞ்சூர், தலையூர், நசியனூர், பெரியபுலியூர், புன்னம்,
மாவலூர், காவேரிபுரம், சாம்பள்ளி, வேம்பத்தி, சிறுவலூர், காஞ்சிக்கோயில், கவுந்தப்பாடி,
செவியூர், குளப்பலூர், கோசம், குருமந்தூர், இலத்தூர், நம்பியூர், நடுவச்சேரி, கருவலூர்,
துடியலூர், பேரூர், வெள்ளலூர், தொண்டாம்புத்தூர், கீரனூர், வேலூர், கலையமுத்தூர், மானூர்,
தாண்டிக்குடி, கொத்தயம், குத்திலுப்பை, தேவத்தூர், மயில்ரங்கம், அரவக்குறிச்சி, கூத்தம்பட்டி,
வெங்கரை, வெங்கம்பூர், கண்ணபுரம், மாம்புரை, காரைச்சேரி, பொன்னிவாடி, பில்லூர்,
இருடிகளத்தூர், மேச்சேரி, கம்பையனூர், விசயமங்கலம், காடையூர் ஆகிய ஊர்களையும்
காணியூராகக் குறிக்கிறது (எண்பத்தெட்டு ஊர்கள் என அப்பாடல் குறிக்கிறது).
ஒழுக்ககுலம்
காணியூர்கள்:
ஆத்தூர், ஊஞ்சலூர், சேந்தமங்கலம், கலசப்பாடி, திங்களூர், வெங்கரை,
தோட்டக்குறிச்சி, தேவநல்லூர், கோமங்கை, கண்ணபுரம், இளம்பிள்ளை, பெருங்களந்தை,
மருதூர், ஊத்துக்குழி, பொருளூர், கருஞ்சேரி, மங்கலம், கூத்தம்பூண்டி, கொடுமணல், காகம்,
நத்தம், குறிச்சி, கரசை ஆகிய ஊர்கள் ஒழுக்கர் குலக் காணியூர்கள்.
காணிப்பாடல்:
செங்கமல வாவிசூழ் ஆத்தூரு ஊஞ்சலூர்
சேமங்கை கலசபாடி
திங்களூர் வெங்கரை தோட்டக் குறிச்சியும்
தேவநல் லூர்கோமங்கை கல்வெட்டும்
துங்கமுயர் கண்ணபுர மாமிளம் பிள்ளையும்
துலங்கிய பெருங்களந்தை
தோராத மருதூரு ஊத்துக் குளிபுலரி
தோன்றுசிறு தாவளத்து
கொங்குலவு நகரம் குறுஞ்சேரி மங்கலம்
குலவுகூத் தம்பூண்டியும்
கூறரிய கொடுமணல் காகம்நத் தத்துடன்
குறிச்சிதென் கரசைமுதலாய்
மங்காத புகழ்பரவு மேழிப் பதாகையான்
வள்ளலே ஒழுக்ககுலனே
மன்னுலவு குவளையணி நல்லண நராதிபதி
வளருமூ தூருதானே.
ஓதாள குலம்
காணி ஊர்கள்:
பரஞ்சேர்வழி, பெருந்தொழு, மணியனூர், குண்டடம், வெள்ளகோயில், கண்ணபுரம்,
கண்டியன்கோயில், நிழலி, கொடுவாய், கொற்றமங்கலம், நல்லிகோயில், குரும்பலமாதேவி,
சித்துப்பூண்டி, கோலாரம், நல்லூர், வடகரை ஆத்தூர், தாழக்கரை ஆகிய ஊர்கள் ஓதாளர் குலக்
காணியூர்கள் ஆகும்.
முதல் காணிப்பாடல் :
ஆதிமுத லாம்பரஞ் சேர்வழி பெருந்தொழுவு
அழகுமணி யம்குன்றிடம்
அன்பான வெள்ளக்கல் கண்ணபுர மும்கண்டி
யன்கோயில் நிழலிகொடுவாய்
நீதியுள அரையநாடு நீள்கொற்ற மங்கலம்
நிலைமைசெறி நல்லிகோயில்
நேர்பெறு குரும்பைமா தேவிசித் துப்பூண்டி
நிகருகோ லாரம்நல்லூர்
தாதுலவு வடகரையில் ஆத்தூரு டன்பரிவு
தாழக்கரை தானுமாகும்
தமிழ்பெற்ற கீர்த்தியும் புகழதும் விளங்கினோர்
தரணியில் பெருமையுடையோர்
ஓதுபுகழ் சித்திரமே ழிக்கொடிக் கதிபனே
ஓதாள கோத்திரற்கு
உற்றநிலை யாம்என நற்றமிழ் விளங்கவே
உறுதியென வருகாணியே!
இரண்டாவது காணிப்பாடல்:
ஓதாள குலத்தாரின் மற்றொரு காணிப்பாடல் பழையனூர், காவிரிப்பூம்பட்டினம்,
தில்லைப்பாடி, மைசூர், கோட்டை, வடமலை, கார்பாடி, பாச்சலூர், நரையனூர், திடுமலூர்,
கும்பகோணம், உறையூர், அஞ்சுகோட்டை ஆகிய ஊர்களைக் காணியூராகக் குறிப்பிடுகிறது.
பழையனூர் காவிரிப் பூம்பட்டி னம்தில்லை
பாடியும் மைசூருடன்
நிலையான கோட்டையும் வடமலைக் கார்பாடி
நேர்பாச்ச லூர் நரையனூர்
நலமான திடுமலூர் கும்பகோணம் உறையூர்
நவில்அஞ்சு கோட்டைச்சேத்ரம்
உளமகிழ் நாற்பத்தெண் ணாயிரம் கோத்திரம்
ஓதாளர் குலக்காணியே.
கணக்கன்குலம்
காணியூர்கள் :
வெள்ளியணை, வஞ்சி (கரூர்) கொந்தளம், ஓமலூர், விண்ணப்பள்ளி, பவுதை,
தேவநல்லூர், பல்லாக்கோயில், முன்னூர், வள்ளியறச்சல், சுரர்பூண்டி, கீரனூர், மைவாடி கடத்தூர்
ஆகியவை கணக்கன் குலத்தார் காணியூர்கள்.
காணிப்பாடல் :
வெள்ளி யணைவஞ்சி கொந்தளம் ஓமலூர் மேவுவிண்ணப்
பள்ளி பவுதையும் தேவநல் லூர்பல்லாக் கோயில்முன்னூர்
வள்ளி யறச்சலூர் பூண்டியும் கீரனூர் மைவாடியும்
விள்ளும் கடத்தூர் கணக்க குலத்தோர் மேவியதே.
கண்ணந்தை குலம்
காணியூர்கள் :
காஞ்சிக்கோயில், பாப்பினி, கன்னிவாடி, காளமங்கலம், முளசி, காகம், கொளாநல்லி,
நசியனூர், மணியனூர், ஓடப்பள்ளி, தகடப்பாடி, கொன்னையாறு, கத்தாங்கண்ணி, மோரூர்,
ஆலத்தூப்பட்டணம், ஆனங்கூர் ஆகியவை கண்ணந்தை குலக்காணியூர்கள்.
காணிப்பாடல் :
வாசமிகு காஞ்சிபார்ப் பதிகன்னி வாடியும்
வளர்காள மங்கைமுளசி
வல்லபெரு காகம் குழாநல்லி நசையனூர்
மணியனூர் ஓடைதகடை
ஆசைமிகு கொன்னையார் பரவுகற் றான்காணி
அழகுபெறு மோரூர்புகழ்
ஆலத்தூர்ப் பட்டணம் பெருகும்ஆ னங்கூரு
ஆகமார்க் கண்டன்வயதாம்
தேசமிகு கொங்கினில் பெரியநா யகிஅருள்
செயகால மும்விளங்கத்
திவ்யநவ மணிசுனைகள் சடைவன்னி கொன்றையும்
தேங்குதா லம்சிறப்பாய்
நேசமிகு கண்ணந்தை குலஉசிதன் எனவந்த
நேமமிகு பச்சைபூபா
ஈன்றவர புத்திரன் செல்லப்ப பூபதி
நிலைமையென வருகாணியே!
கண்ணகுலம்
காணியூர்கள் :
கன்னிவாடி, காகம், கொளாநல்லி, காளமங்கலம், கிழாம்பாடி, நசியனூர்,
காஞ்சிக்கோயில், மோரூர், முளசி, ஏமப்பள்ளி, சம்பை, கத்தாங்கண்ணி, ஆலத்தூர்ப் பட்டணம்,
மணியனூர், ஓடப்பள்ளி, தகடப்பாடி, கொன்னையாறு, ஆனங்கூர், கூடல், பாதிரை ஆகியவை
கண்ணகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல் :
கன்னி வாடி காகம் குழாநிலை
காள மங்கை கிழாம்பாடி நசையனூர்
எண்ணுகாஞ் சிக்கோயில் மோரூர் முளசியும்
ஏவை சம்பையும் கற்றான் காணியும்
வண்ணம் மேவிய ஆலத்தூர்ப் பட்டணம்
மணிய னூருடன் ஓடை தகடையும்
கொன்னை யாறுடன் ஆனங் கூரதும்
கூடல் பாதிரை கண்ணகுல ஊர்களே!
கண்ணகுலக் கண்ணப்ப மன்றாடியார் புகழ்ச்சிப் பாடலில் காங்கயம் காணியூராகக்
குறிக்கப்பட்டுள்ளது.
காடைகுலம்
காணிஊர்கள் :
வள்ளியறச்சல், பாப்பினி, ஆத்தூர், கீரனூர், ஆதியூர், பூந்துறை, பெருந்தொழு,
பவித்திரம் வெள்ளியணை, கழனியூர், ஏழூர், தோழூர், கங்குப்பட்டி, முளையாம்பூண்டி, பில்லூர்,
வாழவந்தி, புன்னம், இளம்பிள்ளை, பட்டிலூர், சடையகுளம், மருதுறை ஆகி இருபத்தொரு
ஊர்கள் காடைகுலத்தாரின் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல் :
கன்னல்உயர் வள்ளிநகர் புகழ்பெறும் பார்ப்பதி
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் கீரனூர் ஆதியூர் நன்னகர்
காரணர் உறைந்தபதியும்
நன்னர்சேர் பூந்துறை பெருந்தொழு பவித்திரம்
நன்மைசெறி வெள்ளியணையும்
நலமான கழனியூர் ஏழுரு தோழூரு
நாட்டிலுயர் கங்குப்பட்டி
இன்னிலத் திலகுமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டிலூர் சடையகுளம் மருதுறை
இவைபதியில் அரசுபுரியும்
கல்வெட்டும் காணிப்பாடலும் கல்வெட்டும் காணிப்பாடலும்
பொன்னின்மே ழிக்கதிபர் செங்குவளை அணிமார்பர்
பூமிபா லகரானவர்
போதமிகு காடைகுல மகராசர் வாழ்கின்ற
புகழ்பெருகு காணியிவையே!
காடை குலத்திற்கு வேறு மூன்று காணிப்பாடல்களும் உள்ளன. அவற்றில் தூசியூர்,
மாவிரட்டி, சேமந்தூர், வெண்ணந்தூர், மங்கலம், மோடமங்கலம், காகம், ஆலாம்பாடி, நசியனூர்,
வேம்பத்தி, கூடற்கரை, சிறுநல்லூர், பட்டாலி ஆகிய ஊர்களும் காடைகுலக் காணியூர்களாகக்
குறிக்கப்பெறுகின்றன.
இரண்டாம் காணிப்பாடல் :
கன்னல்உயர் பூந்துறை பெருந்தொழு பவுத்திரம்
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் வெள்ளியணை ஆதியூர் நன்னகர்
காரணர் உறைந்தபதியும்
இன்னிலத் தினியமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டிலூர் சடையகுளம் மருதுறையும்
ஏழூரு தோழூருடன்
சென்னெல்செறி கழனியூர் கீரனூர் ஆண்மைமிகு
திறமையுள கங்குப்பட்டி
செல்வமிகு வள்ளிநகர் காடைகுல வள்ளல்கள்
தீர்க்கஅர சாட்சிபுரியும்
மன்னர்பணி யும்பெரிய நாயகி மனோன்மணியின்
மலரடியை மறவாதவர்
வன்னிபூ பதிஉதவு செல்லயன் காடைகுல
மகராசர் காணியிதுவே!
மூன்றாம் காணிப்பாடல் :
கன்னல்செறி தூசியூர் புல்லூர் தோழூர்
கனமான மாவிரட்டி
கதித்திடும் சேமந்தூர் வெண்ணந்தூர் மங்கலம்
கனிவாத்தூர் தேவர்தொகையும்
மன்னவர் புகழ்மோட மங்கலம் இவையுடன்
வளமைபெறும் பூந்துறையுமாம்
வண்மைசேர் காகம் ஆலாம்பாடி நசையனூர்
வளர் கூடக்கரையுமாம்.
சென்னெல்செறி புன்னம் பெருந்துறை வேம்பத்தி
சிறுநல் லூர்பட்டிலூர்
செயமான இளம்பிள்ளை கீரனூர் பட்டாலி
திறமான வள்ளிநகரும்
அன்னதரு வான பார்ப்பதி நகருக்கு
அதிபன்என வந்தசுமுகன்
அரசர்மனம் மகிழவரும் காடைகுல மேருவென
அவனிதனில் வருகாணியே!
நான்காம் காணிப்பாடல் :
நன்னெறிசேர் பூந்துறை பெருந்துறை பவுத்திரம்
நன்மைசெறி வெள்ளியணையும்
நலமான கழனியூர் ஏழூரு தோழூரு
நாட்டிலுயர் கங்குப்பட்டி
இன்னிலத் திலகுமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பள்ளி பட்டிலூர் இவையெலாம் அதிபதி
என்வந்த காடைகுலனே
பன்னுதமிழ் வாணருக்கு ஐந்தரு வேநீலி
பழிகழு வியநிருபனே
பார்மீதில் உன்புகழ்க்கு இணையாக ஒருவரை
பகருதற் கெளிதாகுமோ
மன்னர்புகழ் பூந்துறைசை நாடாளும் அவிநாசி
மைந்தனே மகராசனே
மதனவா ரணவாசி ராசனே எதிரிட்ட
மருமன்னி யார்கண்டனே!
காரிகுலம்
காணியூர்கள் :
கன்னிவாடி, காரையூர், கொந்தளம், எழுமாத்தூர், சேவூர், மேச்சேரி, பூங்குறிச்சி,
ஆனங்கூர், மண்மங்கலம், பட்டிலூர், வள்ளைக்குழி உஞ்சணை, புத்தூர் ஆகியவை காரிகுலக்
காணியூர்களாகும்.
காணிப்பாடல் :
நானிலம் மதிக்கஉயர் புகழ்கன்னி வாடியும்
நற்காரை யூர்கொந்தளம்
நறைமேவு பொழில்சூழும் எழுமாதை நகர்சேவூர்
நவிலுமேல்ச் சேரிநகரம்
மானிதி குலாவூபூங் குறிச்சிஆ னங்கூர்மண்
மங்கலம் பட்டிலூரும்
மஞ்சுலவு வள்ளைக் குழிப்பதியும் உஞ்சணையும்
வைப்பாண புத்தூருடன்
தானினிய காணிபெறு காரிகுல தூயனே
தமிழன்பர்க்கு அடிமைமுறியும்
தானுலவு கைத்தல மேழிப் பதாகையான்
தண்குவளை மாலைமார்பன்
தேனினிய மொழிமாதர் ஆசைபெறு மார்பனே
தேவேந்திர முத்தேந்திரனே
சேயநின் சொல்லரி வானநஞ் சயதீர
சீர்த்திமிஞ் சியயோகனே.
குழாயர் குலம்
காணியூர்கள் :
கண்ணபுரம், அவிநாசி, வைகாவூர் (நாடு), பூந்துறை (நாடு), கோயிலூர், விளங்கில்,
கண்டியன்கோயில், நிழலி, கலியாணி, ஆனையூர், குழாநிலை, குயப்பள்ளி, கருமாபுரம்,
புத்தரச்சல், கோயில்பாளையம், நிரையூர், கொற்றனூர் ஆகியவை குழாயகுலக்
காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வளமிலகு நாகமலை சென்னிமலை கொல்லிமலை
வானிலங்கும் ஆனைமலைசேர்
மாசிலா அலகுமலை பன்றிமலை பொன்னூதி
மலைசெம்பொன் மலைகுடகுடன்
தலமிளகு காஞ்சிமா நதிவானி நள்ளாறு
தாழ்வில்ஆன் பொருநைலவணம்
தாங்குநதி காவேரி ஆளியாறுடன்பல
தருமதென் கரைநாடுகாண்
புளகண்ணை அவிநாசி வைகாவூர் நாடுகீழ்ப்
பூந்துறைசை மேல்ப்பூந்துறை
புகழ்கோயி லூர்விளங்கில் கண்டியன் கோயில்நிழலி
பொற்பழரும் கலியாணியூர்
களபமுள ஆனையூர் குழாநிலை குயப்பள்ளி
கருமாபுரம் புத்தரசை
கவசைநிரை யூர்கொற்றை மேவிய குழாயரைக்
காத்திடும் பெரியம்மனே.
கூறைகுலம்
காணியூர்கள் :
தலையநல்லூர் (சிவகிரி), மின்னாம்பள்ளி, சேமூர், மாதேவி, திடுமல், நசியனூர்,
வெள்ளியணை, மேச்சேரி, செகதாபுரம், கொத்தனூர், பாப்பினி, பிடாரியூர், பழனி,
திண்டமங்கலம், நவனி, அரசிலாமணி, பெரியபுலியூர், கிழாம்பாடி, கலங்காணி, வடுகநகர்,
வளவனூர் ஆகியவை கூறைகுலக்காணியூர்கள்.
முதல் காணிப்பாடல் :
செந்தமிழ் வளம்பெற்ற தலைசைமின் னாம்பள்ளி
சேமூரு மாதேவியும்
செய்திடுமல் நசையனூர் வெள்ளியணை மேச்சேரி
செகதாபுரம் கொத்தனூர்
அந்தமிகு பாப்பினி பிடாரியூர் பழனியும்
அருள்திண்ட மங்கைநவனி
அரசிலா மணிபெரிய புலிநகர் கிழாம்பாடி
அழகுள கலங்காணியும்
சந்தமிகு வடுகநகர் வளவனூர் இவையெலாம்
தழைக்கவே காணிபெற்றாய்
சதுரங்க சேனைசெறி அரையவள நாடனே
சம்பிரமிகு கூறைகுலனே
சந்தமிகு நாகீசர் அழகுதிரு வனிதையை
கரிவரதர் பொன்காளியை
கனவில்மற வாமல்உயர் காளிஅரு ளால்வந்த
காளியண மகராசனே!
இரண்டாம் காணிப்பாடல் :
திதமுலவு புகழ்கொண்ட தலசைமின் னாம்பள்ளி
சேமூரு நசையனூரும்
திடுமல்மா தேவிநகர் அரசிலா மணியுடன்
செயமான வளவனூரும்
பதியில்மிக் காகிய பிடாரியூர் வெள்ளியணை
பார்ப்பதியும் மேச்சேரியும்
பரிவான பெரியபுலி யூர்காணி யும்கொண்ட
பண்பான கூறைகுலனே
மதிமுக சவுந்தரிய ரணவீர பத்ரனே
வல்லாண்மை பெற்றசூரா
வளமான பொன்னிநதி வானிநதி காஞ்சியும்
மருவுபூந் துரைநாடனே
அதிமதன ரூபன் பழனியைத் துணைவன்எனும்
அன்பான வரராமனே
அறிவுடைய மால்துரைச் சின்னவன் புதல்வனே
அமராப திக்குரிசிலே.
சாத்தந்தை குலம்
காணியூர்கள் :
வெள்ளோடு, நாகம்பள்ளி, கூகலூர், விசயமங்கலம், குன்னத்தூர், அல்லாளபுரம்,
கூடலூர், உகாயனூர், காங்கயம், இலவமலை, பாலத்தொழு, கருவலாம்பாடி, காரைத்தொழு,
அத்தாணி, அல்லிபுரம், வல்லிபுரம் ஆகியவை சாத்தந்தை குலக் காணியூர்களாகும்.
புதுநகர் நல்லணவேள் காதல்:
வெள்ளோடை ஆம்பல்களும் மெய்நளின் மாமலர்சூழ்
வெள்ளோடை யும்பரவு வெள்ளோடை அம்பதியும்
நாகநகர் கூகலூர் நல்விசைய மங்கையுடன்
சேகரம்சேர் குன்றைநகர் செப்பும்அல் லாளபுரம்
கூடலூர் உகாயனூர் கொள்ளஅருள் காங்கயமும்
நீடுஇல வன்மலையும் நேயமிகும் பாலைநகர்
நற்கருவ லாம்பாடி நன்னகராம் காரைத்தொழு
சொற்குலவும் அத்தாணித் தொன்னகரும் நன்னயமாய்
அல்லிபுரத் துக்கதிக அதிகபுகழ் நிறைந்த
வல்லிபுரம் என்னும் வளநகரும் மேன்மைகொண்டோன்
இன்னும் பலகாணி இன்பமுட னேபடைத்த
கன்னன்நிகழ் சாத்தந்தை கனத்த புகழுடையான்!
காணியூர்கள் :
வெள்ளோடு, காங்கயம், விசயமங்கலம், காரத்தொழு, பாலத்தொழு, அல்லாபுரம்
கூறப்படுகின்றன.
முதல் காணிப்பாடல்:
கொங்கினில் கலியுகம் சகாத்தநா லாயிரத்து
இருநூற்றி ஏழுபத்தில்
குலோத்துங்க சோழனும் சேரனும் பாண்டியன்
குலமது வகுக்கும் நாளில்
மங்கைமணி சாத்தந்தை உலகில்மன் றாடிக்கு
வரிசைப்பட் டம்தரித்தே
மன்னுகர வருஷம்ஆ வணிதேதி பத்தினில்
வந்தசெவ் வாய்க்கிழமையில்
கங்கைகுலக் காலிங்க ராயவெள் ளோட்டுடன்
காங்கயம்விசய மங்கைநகரம்
காரைதொழு பாலத்தொழு அல்லாள புரமதில்
கடகம்எனும் யானைகட்டி
முன்கையில் சந்தனம் உரைத்ததே வணன்உதவு
முந்துபெத் தாமகீபன்
முனைபெற்ற திருமலை சரவணமன் றாடிக்கு
மூவர்முடி சூட்டினர்களே
இரண்டாம் காணிப்பாடல் :
காணியூர்களாக நாகம்பள்ளி, உகாயனூர் கூறப்படுகின்றன.
திசைபரவு கலியுகம் சகாத்தம்ரெண் டாயிரம்
சென்றநூற் றேழுக்குமேல்
தசமியும் ரேவதி வெள்ளிசுக்ல பட்சமதில்
செம்பொன்மா முடிசூட்டியே
மசச்சோழன் இம்முடிப் பாண்டியன் சேரனும்
மன்னர்கள் முன்பாகவே
வார்த்தையது தவறாமல் சாத்தந்தை நீயென்று
வளர்உலகில் மன்றாடியார்
விசையுற்ற நாகநகர் வெள்ளோடு காங்கயம்
வியன்காரைத் தொழுபாலையும்
வெற்றியுள உகாயனூர் அல்லாள புரமதனை
வேளமனு நீபடைத்தாய்
அசையாத யோகனாம் காலிங்கன் திருமலை
அன்புபெத் தாமகீபன்
அழகுபெறு திருமலை சரவண மன்றாடிக்கு
அதிகமுடி சூட்டினாரே.
செகன்குலம்
காணியூர்கள் :
கெட்டி செவியூர், அவிநாசி, சேவூர், வண்டியூர், மணக்கடவு ஆகிய காணியூர்களும்,
வடகொங்கு, நரையனூர் நாடு, சென்கரை நாடு ஆகியவற்றில் காணியூர்களும் உண்டு.
காணிப்பாடல் :
வட்டமிடு பரிநகுலன் கெட்டிசெவி யூரனே
வடகொங்கு நன்னாடனே
மருவுபுக் கொளியூரு அழகுசே வூரனே
வண்டியும் பதியூரனே
கொங்கு வேளாளர்
திட்டமுடன் வருகின்ற பொங்கலூர் நாடனே
தென்கரசை வளநாடனே
சித்தாறு காஞ்சிபுரம் வானிகா வேரியும்
செல்வனே புகழ்பெற்றவா
அட்டதிசை புகழவரு காட்டம்மை சின்னம்மை
அறிவுடைய முருகேசரும்
அரசுபுரி வஞ்சியில் பதிகள்துரை மக்கள்முன்
ஆஸ்தான மதுமெச்சவே
கட்டளைய தாகவரு மணக்கடவு எனதென்று
காணிக்கு மழுவெடுத்தாய்
கந்தனருள் செகன்குல தயிலன்அருள் தயவனே
கனயோக குணசீலனே!
செங்கண்ணன்குலம்
காணியூர்கள் :
சிற்றழுந்தூர், கடம்பங்குறிச்சி, சிராமலை, கண்ணபுரம், வையப்பமலை, நேரிமலை,
திருச்சிராப்பள்ளி, திருவெள்ளறை, சீரங்கம், சிவாயம், சிதம்பரம், குடுமியாமலை,
திருவொற்றியூர், திருக்கழுக்குன்றம், காங்கயம், கொடுமுடி, சிங்கநல்லூர், கொங்கூர்,
திருவானைக்காவல், சீர்காழி, கன்னாங்கோயில், விசயநகரம், முதலைநகர் ஆகியவை
செங்கண்ணகுலக் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல்:
திருவுற்ற சிற்றழுந் தூர்கடம் பங்குறிச்சி
சிராமலை கண்ணபுரமும்
செயமிகும் வையமலை நேரிமலை சீர்திருச்
சிராப்பள்ளி திருவெள்ளறை
தருவுற்ற சீரங்கம் சிவாயமலை சிதம்பரம்
தன்னுலவு குடுமிமலையும்
தருமதிரு வொற்றியூர் கழுக்குன்றம் காங்கயம்
தவமிகும் கொடுமுடியுடன்
மருவுற்ற சிங்கநல் லூருகொங் கூருடன்
வளர்திரு ஆனைக்காவல்
வளமிகுசீர் காழிகன் னாங்கோயில் விசயநகர்
வடிவுள்ள முதலைநகரும்
கல்வெட்டும் காணிப்பாடலும் கல்வெட்டும் காணிப்பாடலும்
அருளுற்ற சிவமலைக் குமரர்தாள் மறவாத
அன்புசெங் கண்ணகோத்திரன்
அமராப திப்பல்லவ ராயதுரை எந்நாளும்
அரசுபுரி காணியிவையே!
இரண்டாம் காணிப்பாடல் :
சிற்றழுந் தூரு கடம்பங் குறிச்சி சிதம்பரமும்
கற்றபொங் கற்சி ராமலை காங்கயம் கண்ணபுரம்
கொற்றம் கழுக்குன்றம் மேழிப் பதாகை குவளையணி
வெற்றியூர் செங்கண்ண கோத்திரத் தார்காணி விசையங்களே!
செம்பகுலம்
காணியூர்கள் :
பாசாறு, கருவூர், திருவழுந்தூர், பரஞ்சேர்வழி, பொங்கலூர் (நாடு), மணக்கடவு, நல்லூர்,
அவிநாசி, காஞ்சிக்கோயில், சத்தியமங்கலம், புலியூர், சம்பை, முசிறி, குளித்தலை, குந்தாணி
போன்ற ஊர்களும் குடகுப்பகுதியும் செம்பகுலத்தார் காணியூர்களாகும்.
காணிப்பாடல் :
பங்கயத் துளபணி சேருமலை மன்னனே
பண்ணைமே டாதிபதியே
பாசாறு கருகூர் திருவழுந் தூரனே
பரஞ்சைநக ராதிபதியே
பொங்கலூர் நாடனே மணக்கடவு வேந்தனே
புகழ்சேர்ந்த நல்லூரனே
புக்கொளி யூர்காஞ்சிக் கோயில்சத் திமங்கை
புலியூர் சம்பைதனிலே
இங்கிதம தாகவரும் செம்பகுல மன்னனே
இயல்முசிறி குளித்தலையனே
எங்கும்புகழ் செம்பகுலக் கங்கைகுலப் புண்ணியா
இரவலர்க்கு உதவுதருவே
கொங்கிலுயர் பொருநைநதி சித்தாறு காஞ்சியும்
குடகுகுந் தாணிஅதிபா
குழந்தைவே லப்பனருள் அமரா பிதிக்குரிசில்
குவளையந் தார்மார்பனே!
செம்பூத்தன்குலம்
காணியூர்கள்:
மாம்பறை, இரணபுரம், மண்டபத்தூர் அத்தனூர், வயிரூசி, குமரமங்கலம், அந்தியூர்,
இராம கூடல், காடனூர், காண்டகுலம் மாணிக்கம், வாகை, கீரம்பூர், தாராபுரம், தென்சேரி, விதரி
(அத்திபாளையம்), சேமூர், மொஞ்சனூர், கூடச்சேரி, கருமனூர், புல்லூர், சிவதை, வாழவந்தி,
உத்தமசோழபுரம், மாத்தூர், திண்டமங்கலம், வைகுந்தம், முடுதுறை, கொற்றனூர்
(சங்கராண்டம்பாளையம்) ஆகிய ஊர்கள் செம்பூத்த குலக் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல் :
மண்டலம் தன்னில்வளர் மாம்பறை இரணபுரம்
மண்டபத் தூர்அத்தனூர்
வயிரூசியும்குமர மங்கலமும் அந்தியூர்
வளம்பெருகு இராமகூடல்
வண்டமிழ்க் காடனூர் கண்டகுல மாணிக்கம்
வாகைகீ ரம்பூருமே
மன்னுதா ராபுரம் தென்சேரி விதரிநகர்
மானசே மூர்மொஞ்சனூர்
எண்டிசை விளங்குகூடச்சேரி கருமனூர்
இலகுபுல்லூர் சிவதையும்
இயல்வாழ வந்திபுகழ் உத்தமச் சோழ புரம்
எழிலான மாத்தூருடன்
திண்டமங் கலமும்வை குந்தமும் முடுதுறை
தென்கொற்றை நகரில்வாழும்
திருமலைச் செல்வனெனும் முதலிமகி பாலனே
செம்பூத்த குலதிலகனே!
ஒரு சுவடியில் அத்தனூர் என்பதற்குப் பதிலாக ஆரியூர் என்று எழுதப்பட்டுள்ளது.
மாத்தூருடன் என்பதற்குப் புத்தூருடன் என்ற பாடபேதம் உண்டு. செம்பூத்த குலத்திற்கு வேறு
இரண்டு காணிப்பாடல்கள் உள்ளன. அவற்றில் பிறசை, கருமாபுரம், மங்கலம், கொன்னையாறு,
வேட்டம்பாடி, திருவாரூர், தோழூர், தம்மபட்டி, தாளப்பதி, மின்னக்கல், சோலையூர், காழனூர்,
பிள்iiயாநத்தம், முருங்கத்தொழு, அயோத்தியாப் பட்டணம், தோகைநத்தம், வஞ்சி, நல்லூர்,
சீனாபுரம், ஆதியூர், வடுகநகர், லக்கம்பாடி, கொங்கணாபுரம், கன்னிவாடி, இரும்பை,
காதப்பள்ளி, வேலூர், நத்தம், வீசனம், தோகைநத்தம் ஆகிய ஊர்கள் செம்பூத்த குலத்தார்
காணியூர்களாகக் குறிக்கப் பெறுகின்றன. கல்வெட்டும் காணிப்பாடலும் கல்வெட்டும் காணிப்பாடலும்
இரண்டாம் காணிப்பாடல்:
மாவுற்ற கீரம்பூர் பிறசை மாபுரம்
மங்கலம் கொற்றைமொஞ்சை
மாநகர் கொன்னைவேட் டம்பாடி விதரிதிரு
வாரூரு உடும்பைசிவதை
காவுற்ற ஊதிநகர் தோழூரு தம்மநகர்
தாளபதி மின்னல்சோலை
காழனூர் பிள்ளையார் நத்தம்ஈ சன்முருங்
கைப்பெரும் தொழுவயோத்தி
பூவுற்ற தோகைநத் தம்கொங்கு வஞ்சிரண
புரம் நல்லூர் சீனம்ஆதி
புரம் வடுக நகர்லக் கம்பாடி கொங்கணா
புரம்சென்னெல் கன்னிநகரே
கூவம்உற் றிடுவாழ வந்திமுடு துறைவயிரூசி
கொல்லிசிற் றாறுபொருளை
கொற்றநகர் உற்றசெம் பூத்தகோத் திரர்காணி
கொண்டனர்கள் மிகவாழ்கவே.
மூன்றாம் காணிப்பாடல்:
சீர்மருவு கீரம்பூர் பிரசைவேட் டம்பாடி
தென்கொற்றை யூர்விதரியூர்
செய்யபுகழ் மின்னக்கல் இடும்பைகா தப்பள்ளி
செம்பைவே லூருநத்தம்
கார்மருவு சோலைசெறி பிள்ளையா நத்தமும்
கருமநகர் வீசனமதும்
கனமிகு முருங்கைப் பெருந்தொழு அயோத்தியும்
கல்விசேர தோகைநத்தம்
ஏர்மருவு கொங்குதா ராபுரம் மிக்கான
எழில்தரும தானநல்லூர்
இனியதென் கொல்லிமலை எண்பத்கெட் டூருக்கும்
இறைவனே செம்பூதனே
வார்அணியும் முலைமாதர் வேள்என மதிக்கவரு
மைந்தனாம் ஐந்தருவதாம்
வானவர்கள் புகழவரு நலகுமா ரேந்திரன்
மாற்றலர் மனத்தின்இடியே.
செல்லகுலம்
அஞ்சூர், அனுமன்பள்ளி, தலைநாடு, இடையாறை, தாராபுரம், ஈரோடு, இருப்புலி, பட்டிலூர்,
எழுமாத்தூர், கருங்கல்பாடி, வெஞ்சமாங்கூடல், கடம்பங்குறிச்சி, முட்டம், கொன்னையார், கச்சுப்பள்ளி, ஆனங்கூர், பருத்திப்பள்ளி, வண்டிநத்தம், குலவிளக்கு, அவிலூர், அறச்சலூர், வள்ளிஎறிச்சல், பவானி, வட்டூர், விளக்கேத்தி, ஆறுகொழு, கோக்கிளாய், மணப்பள்ளி, வெள்ளோடு ஆகிய ஊர்கள் செல்ல குலத்தார் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல்:
தண்டமிழ்க் கவிவாணர் புகழ்அஞ்சி அனுமாதை
தலையநாடு இடையாறையும்
தாரா புரத்துடன் ஈரோடு இலுப்பையும்
தருமமிகு பட்டிலூரும்
எண்டிசையில் எழுமாதை கருங்கல்லுப் பாடியும்
இயல்வெஞ்சை கடம்பம்முட்டம்
இன்பவழி கொன்னையார் கச்சுபளி ஆனங்கூர்
இனமிகும் பருத்திப்பள்ளி
வண்டிநத்தம் குலவிளக்கு அவிலூர் அறச்சலூர்
வள்ளிநகர் கூடுதுறையூர்
வட்டூர் விளக்கேத்தி ஆறுதொழு கோக்கிளாய்
மணப்பள்ளி வெள்ளோடையூர்
கொண்டதுரை யேகனக செல்லகுல மேருவே
கொற்றைஆனந்தன் உதவும்
கூறுமொழி பிசகாத சின்னய வசீரனே
குவலயம் புகழ்த்தாருவே!
செல்ல குலத்திற்கு வேறொரு காணிப்பாடல் உள்ளது. அதில் புகலூர், கருமனூர், கபிலை நகர் ஆகிய
ஊர்களும் செல்ல குலத்தார் காணியூர்களாகக் கூறப்பட்டுள்ளன.
இரண்டாம் காணிப்பாடல்:
அஞ்சையூர் எழுமாதை தலையநாடு இடையாறை
அனுமநகர் தாராபுரம்
ஆறுதொழு ஈரோடு இருப்புலி வெள்ளோடு
அறச்சலூர் பட்டிலூரும்
வெஞ்சநகர் கச்சிபளி வண்டிநத் தங்குல
விளக்கொடு விளக்கேத்தியும்
வெற்புகலி யூர்கொன்னை யாறுடன் பருத்திப்பளி
வெண்கரும னூரினுடனே
செஞ்சொல்புகழ் வள்ளிநக ரும்வண் டுரைசெய்
சீர்மணப் பள்ளியுடனே
தேங்குபுகழ் கோக்கிளாய் இன்ஆனங் கூரதும்
சீரான கபிலைநகரும்
நஞ்சைதிகழ் கின்றகருங் கல்பாடி முட்டம்
நற்கடம் பங்குறிச்சி
நாட்டிலுயர் செல்லகுல மகராசர் காணியொடு
நானிலம் தனில்வாழ்கவே.
செவ்வாயர் குலம்
வானிகூடலூர் (பவானி), மாதப்பநல்லூர், சிறுமுகை, தோடயம், வெள்ளகோயில், உப்பிடமங்கலம்,
செவளம்பூண்டி, பள்ளிமங்கலம், சத்தியமங்கலம், செங்கப்பள்ளி, ராசிபுரம், அஞ்சூர், ஏழூர், சேவூர், பழையனூர், மலையனூர், பருத்தியூர், சகரந்தி, தேவதாயம், கோட்டை, மணிநகர், கருவலூர், தகடப்பாடி, சோழனூர், வஞ்சி (கரூர்), கொங்கல்நகர், அரவக்குறிச்சி, தாந்தோணி, துங்காவி இவை செவ்வாயர் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வல்லமை புகழ்பரவு செவ்வாயர் குலமருவு
வாணியங் கூடலுடனே
மாதப்ப நல்லூரும் சிறுமுகை தோடயம்
வாழ்வுசேர் வெள்ளகோயில்
நல்லஉப் பிடமங்கை வளமைசெவ ளாம்பூண்டி
நாணயப் பள்ளிமங்கை
நானில மதிக்கவரு சத்திசெங் கைப்பள்ளி
ராசிபுரம் அஞ்சிநகரும்
பல்லவஞ் சேர்கின்ற ஏழூரு சேவூரு
பழையனூர் மலையனூரும்
பருத்தியூர் சகரந்தை தேவதா யங்கோட்டை
பகர்கின்ற மணிநகருடன்
சொல்லரிய கருவலூர் மேவுதக டப்பாடி
சோழனூர் வஞ்சிநகரம்
சுகிர்தமிகு கொங்கல்நகர் அரவக் குறிச்சிதாந்
தோணிதூங் காவிதானே!
சேகர் குலம்
காஞ்சிக்கோயில், ஓமலூர், பனயம்பள்ளி, முத்தூர், மாம்பூண்டி, காரையூர், நீலம்பூர், மண்ணறை
ஆகியவை சேகர குலத்தார் காணியூர்கள்.
காணிப்பாடல்:
முதல்காஞ்சி ஓமலூர் முன்பனசை முத்தூர்
கதிர்செவ ளாம்பூண்டி காரை – மதிசேர்
வாகுபெறு நீலம்பூர் மண்ணறைதான் மன்னும்
சேகர்குலத் தோர்காணி செப்பு.
சேவடி குலம்
மோரூர், நசியனூர், முன்னூர், கிழாம்பாடி, பாரியூர், பட்டிலூர், காரூர், சிங்கநல்லூர், புத்தூர்,
கொங்கூர், இராயகுளம் ஆகியவை சேவடி குலக் காணியூர்கள்.
காணிப்பாடல்:
மோரூர் நசையனூர் முன்னூர் கிழாம்பாடி
பாரியூர் சோழனூர் பட்டிலூர் - காரூரும்
சிங்கநல்லூர் புத்தூர் சேவடிகுலத் தோரிருக்கும்
கொங்கூரு ராயர் குளம்
தனஞ்செயன் குலம்
வெள்ளகோயில், தென்னிலை, மொஞ்சனூர், சேலம், அத்தனூர், அலைவாய்மலை, தேங்குறிச்சி, குன்னத்தூர், கன்னிவாடி, சோமயநல்லூர், சேவூர், முஞ்சனூர் ஆகியவை தனஞ்செய குலக் காணியூர்கள்.
சீர்கொண்ட வெள்ளக்கல் தென்னிலை மொஞ்சனூர்
சேலம்உயர் அத்தனூரும்
திருவுலவு அலைவாய் மலையதும் சேர்ந்தபுகழ்
தேங்குறிச் சிப்பதியுடன்
கார்கொண்ட சோலைசெறி மேன்மைகுன் றாமல்வரு
கனகுன்றை கன்னிவாடி
கனகசோ மயநல்லூர் சேவூரு முஞ்சனூர்
கனமுறும் காணிபெற்றாய்
தார்கொண்ட குவளையந் தாமனே சோமனே
தனஞ்செய குலக்குரிசிலே
தயவுடன் செல்லாண்டி யுமைவீரக் குமாரிரு
தாளிணையை வணங்குதூயர்
வார்கொண்ட கொங்கையர் அனங்கவேள் தேவனே
வரபுத்ர னானசெல்வா
மகராச பதிசெல்ல வசீரகெம் பீரனே
வனசலட் சுமிவாசனே!
தூரகுலம்
காணியூர்கள்:
மானூர், வெங்கம்பூர், குமரமங்கலம், தும்பங்குறிச்சி, சீராப்பள்ளி, பாலமேடு, தூரம்பாடி, காங்கயம்,
பொன்குறிச்சி, முடக்குறிச்சி, கீரனூர், இடையாறை, முடுதுறை, பட்டிலூர், பாசூர், பழமங்கலம், கொடையூர், முசிறி, பழனி ஆகியவை தூரகுலக் காணியூர்கள்.
காணிப்பாடல்:
பங்கயத் திருவுலவு மானூரு வெங்கயம்
பதிகுமர மங்கையுடனே
பண்புதிகழ் தும்பங் குறிச்சி சீராப்பள்ளி
பாலைதூ ரம்பாடியும்
சிங்கநகர் வாழ்வுற்ற பொன்குறிச் சிக்கதிர்
சிறந்திடும் முடக்குறிச்சி
சீர்பெருகு கீரனூர் இடையாறை முடுதுறை
சிறந்திடும் பாட்லூரும்
கொங்குலவு சோலைசூழ் பாசியூர் பழமங்கை
கொடையூரு முசிறிதனையும்
குவலயத் தினில் அரசு புரிகின்ற தூர குல
கொற்றனூர் பழனிதனையம்
அங்கணுல கம்பரவு சோழீசர் சிவகாமி
அடியிணையை மறவாதவர்
அத்திரவிழி யார்மதனன் உத்தம குணாநிபுண
அத்தியண மகராசனே!
தேர்வேந்த குலம்(தேவேந்திர குலம்/ தேவாத்தை)
மண்டல மதிக்கவரு தென்னிலை ஈசான
மங்கைவேம் பத்திநகரும்
மண்ணறை பெருங்குறிச் சிப்பதி முறங்கமொடு
மங்கலம் கீரனூரும்
விண்டல மளாவுபுகழ் கொண்டதென் காகம்
விளக்கேத்தி ஆரியூரும்
மிக்கவே ளாம்பூண்டி மொஞ்சனூ ரிவையெலாம்
மிகஅரசு புரிநகுலனே
அண்டினம தாபரண தேவேந்திர குலதிலகன்
அதனில்வரு காராளனே
ஆவுடை மகாலிங்கர் உமையதிரு வல்லிதன்
அடியிணையை மறவாதவர்
செண்டுமுலை யார்மதன வேள்சின்னத் தம்பியருள்
சேயா உபயதூயா
தென்னவனை நிகரான குமாரசின் னயதீர
செகமண்ட லாதிபதியே!
தோடைகுலம்
காஞ்சிக்கோயில், பாப்பினி, கன்னிவாடி, காளமங்கலம், முளசி, கூத்தம்பூண்டி, காகம், கொளாநல்லி, நசியனூர், மணியனூர், கொன்னையார், கத்தாங்கண்ணி, ஓடப்பள்ளி, தகடப்பாடி, மோரூர், ஆலத்தூர்பட்டணம், ஆனங்கூர் ஆகியவை தோடைக்குலக் காணியூர்கள்.
முதல் காணிப்பாடல்:
திருவுலவு காஞ்சிபார்ப் பதிகன்னி வாடியும்
செயகாள மங்கைமுளசி
தேவகூத் தம்பூண்டி காகம் குழாநிலை
சேர்நசைய னூர்மணியனூர்
தருவுலவு கொன்னையார் மேவுகற் றான்காணி
தர்மமிகு ஓடைதகடை
தமிழ்பெற்ற மோரூரு ஆலத்தூர்ப் பட்டணம்
தங்கும் ஆனங்கூருடன்
அருளுலவு பச்சோடை நாதர்பெரி யம்மைதாள்
அனதினமும் மறவாதவர்
அன்புபெறு தோடைகுல சின்னய்ய நராதிபதி
அருள்செல்வ னேந்திரபூபன்
மருவுலவு சேனா பதிக்குரிசில் மைந்தனாம்
மன்னவன் குழந்தைவேலன்
மகராசன் எனவந்த மரபுளோர் அனைவர்க்கும்
வளமைபெற வருகாணியே!
இரண்டாம் காணிப்பாடல்:
கன்னி வாடி காகம் கொளாநல்லி
காள மங்கை புகழ்பெறும் பார்ப்பதி
எண்ணும்காஞ் சிக்கோயில் மோரூர் முளசியும்
ஏவை கற்றான் காணி நசையனூர்
வன்ன மேவிய ஆலத்தூர்ப் பட்டணம்
மணிய னூருடன் ஓடை தகடையும்
கொன்னை யாறுடன் கூடல் பாதிரை
கூறு தோடை கண்ணந்தை காணியே
பண்ணை குலம்
கூடலூர், கொல்லன்கோயில், சென்னிமலை, வயிரூசி, பழனி, கொடுவாய், இடையாறு, கீரனூர், வல்லிபுரம், வாணியம்பாடி, ஊஞ்சலூர், பூவாணி, கலியாணி, கண்டியன்கோயில், பெருச்சாணிசத்திரம், புன்னம், பவுத்திரம், கடத்தூர், நெடுங்கூர், தும்பங்குறிச்சி, அவிநாசி, கணியாம்பூண்டி, கொற்றமங்கலம், உறையூர் நடுவனேரி, பூவா நல்லூர் ஆகியவை பண்ணை குலக் காணியூர்களாகும்.
செகதலம் புகழ்வளர் கூடல்கொல் லங்கோயில்
சென்னிகிரி வயிரூசியும்
தென்பழனி கொடுவாயி இடையாறு கீரனூர்
திருவுலவு வல்லிபுரமும்
புகழ்பரவு வாணியம் பாடி தென் ஊஞ்சலூர்
பூவாணி கலியாணியும்
பொன்கண்டி யன்கோயில் பெருச்சாணி சத்திரம்
புன்னம்பவுத் திரம்கடத்தூர்
அகமகிழ் நெடுங்கூரு தும்பங் குறிச்சியும்
அதிகமிகு அவிநாசியும்
அழகுகணி யாம்பூண்டி கொற்றமங் கலமுடன்
அன்பான உறையூரதும்
பகர்நடுவ னேரியும் பூவாநல் லூருடன்
பண்பாக அரசுபுரியும்
பண்ணையங் குலதிலக சின்னயன் அருள்பழனி
பாக்கியனே யோக்கியதருவே!
பயிரகுலம்
காணியூர்கள்:
பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், பரஞ்சேர்வழி, கூடலூர், வெள்ளோடு, கொன்னையாறு,
பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், பரஞ்சேர்வழி, கூடலூர், வெள்ளோடு, கொன்னையாறு,
புள்ளாந்த்தம், திருமுக்கூடல், வயிரம்பள்ளி, கொடுமணல், பாலத்தொழு ஆகியவை பயிரன் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
மன்னு புகழ்கொண்ட மூவரசர் செங்கோல்
வழங்கிடும் நம்குடிவழி
வண்மைபெறு அந்நாளில் நற்குடிநாற் பத்தெண்ணாயிரம்
வகுப்புற்று வாழும் நாளில்
நன்னயம தாகிய பவுத்திரம் வெள்ளியணை
நற்காரை ஆனூரதும்
நலனைதிகழ் தென்பரஞ் சைப்பதியும் சேலமும்
நட்பான கூடலூரும்
தென்னுலவு வெள்ளோடு உயர்கொன்னை யாறுடன்
சேர்ந்தபுள் ளாநத்தமும்
செய்யதிரு முக்கூடல் அண்டவள நாட்டிலுயர்
செல்வவயி ரம்பள்ளியும்
கன்னல்வயல் சேர்கின்ற கொடுமணல் பாலத்தொழு
காணிபெற் றேவாழ்ந்திடும்
காராள ராமன்எனும் பயிரகுல மன்னவர்கள்
கதித்துவளர் காணியிவையே!
வெள்ளோடு பயிரகுலம் பெரியண்ணன் குறவஞ்சி:
பரஞ்சேர்வழி, பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், கார்வளி, கூடலூர், கொன்னையாறு,
திருமுக்கூடல், அண்டநாடு, சேலம், வயிரம்பள்ளி, கொடுமணல், பாலத்தொழு, புள்ளாநத்தம், வெள்ளோடு.
திதிக்கும் பரஞ்சேர் பதிபவுத் திரமும்
பணிதிகழ் வெள்ளி யணைகாரை பூரும்
தெளிவா னூர்கார் வளிகூட லூரும்
வருகொன்னை யாறும் திருமுக் கூடலும்
அண்டவள நாடும் வண்டமிழ்ச் சேலம்
வயிரம் பள்ளியும் நயகொடு மணலும்
பாலத் தொழுவுடன் மேலுமை யான
புள்ளா நத்தமும் வெள்ளோ டுடனே
சீர்பெறக் காணி ஏர்பெறப் படைத்த
நாற்றிசை புகழும் கீர்த்தி விலாசன்
பவள குலம்
காணியூர்கள்:
கோகா நகரம் (?), கணபதி புத்துரர், கொழுமம், மருதுறை, சமத்துhர், பழனி, பழமங்கலம், வாகரை
கோகா நகரம் (?), கணபதி புத்துரர், கொழுமம், மருதுறை, சமத்துhர், பழனி, பழமங்கலம், வாகரை
ஆகிய ஊர்கள் பவளகுலக் காணியூர்கள் ஆகும்.
காணிப்பாடல்:
காணிப்பாடல்:
கோகா நகரங் கணபதி புத்துhர் கொழுமமுமடன்
போகா தழிஞ்சிமிஞ் சியஞ்சேர் மருதுறை பேர்சமத்துhர்
பாபா நகுத மிலம்பு பழனி பழமங்கையும்
வாகாம் பவள குலத்தோர் இருக்கின்ற வாகரையே.
பனங்காடை குலம்
காணியூர்கள்:
திங்களூர், எழுமாத்துhர், கொடுமணல், விசயமங்கலம், தென்நெல்லி, பட்டிலுhர், திருமுருகன்பூண்டி,
திங்களூர், எழுமாத்துhர், கொடுமணல், விசயமங்கலம், தென்நெல்லி, பட்டிலுhர், திருமுருகன்பூண்டி,
குந்தாணி, கச்சுப்பள்ளி, பவானி, மாத்துhர், கங்காபுரம், கொன்னையார், இடையாறு, மானுhர், நடுவச்சேரி, கருவலுhர், பிரமியம், குறுணி, கடுகநகர், கந்தடமாபுரி, குறிச்சி, ஆத்துhர், மருதுறை, கிழாங்குண்டல், சுந்தரபாண்டிய நல்லுhர், பஞ்சமாதேவி, ஊராட்சிக்கோட்டை, அனுமன்பள்ளி, மொடக்குறிச்சி, செங்கப்பள்ளி, ஆனங்கூர், கோனுhர், மாவிளம்பதி, திருவைநகர், பனயம்பள்ளி, வைத்தியூர் ஆகிய ஊர்கள் பனங்காடைகுலக்
முதல் காணிப்பாடல்:
திங்களூர் எழுமாதை கொடுமணல் விசயமங்கலம்,
தென்னெல்லி பட்டிலூரு
திருமுருகன் பூண்டிருந் தாணியும் கச்சிபளி
திருவானி கூடல்மாத்தூர்
கங்கைபுரி கொன்னையார் இடையாறு மானூர்க்
கதித்தநடு வச்சேரியும்
கருவலூர் பிரமியம் குறுணியும் கடுகநகர்
கந்தமா புரிகுறிச்சியும்
பொங்கமுடன் ஆத்தூரு மருதுறை கிழாங்குண்டல்
புகழ்சுந்தர பாண்டியநல்லூர்
பொருள்பஞ்ச மாதேவி ஊராட்சிக் கோட்டைஅனு
மன்பள்ளி மொடக்குறிச்சி
செங்கைஆ னங்கூரு கோனூரு மாவிளம்
திருவைநகர் பனயம்பள்ளி
சீர்பெருகு வைத்தியூர் பனங்கா டைகுலச்
செல்வமிகு காணியாமே!
இரண்டாம் காணிப்பாடல்:
வடிதமிழ் சிறந்தஎழு மாதைமா னூருமாம்
வானிகூ டல்பிரமியம்
மாவிளம் பதிகுறுணி குந்தாணி பட்டிலூர்
மருதுறை கிழாங்குண்டலும்
இடையாறு கச்சிபளி ஊராட்சிக் கோட்டையும்
இனியநடு வச்சேரியும்
இன்பமொடு வன்குறிச்சி ஆத்தூர்பஞ் சமாதேவி
ஏற்கைபெறும் ஆறைநகரும்
கடிகமழ்ந் தருள்திங்க ளூர்கொன்னை யாறுடன்
கனகபனை யம்பள்ளியும்
காசினி மதிக்கவரு கோனூரு தென்னெல்லி
கதித்தஆ னங்கூரதும்
கொடுமணல் அவிநாசி அரசுசெய் பனங்காடை
கோதிலக னாகவந்த
கொண்டலே தெய்வ சிகாமணி மகிழ்ந்தருள்
குமாரசின் னயராயனே!
கொடுமணல் கந்தசாமி காதல்
நல்லூர் கொடுமணலூர் நாரிஎழு மாதைநகர்
வெல்லும் மருதுறையும் விளங்குதிங்கள் மாநகரும்
கோனூர் மொடக்குறிச்சி குவலயத்தில் ஆத்தூரும்
மானூர் பிரமியமும் வானி கூடல்பதியும்
ஆனங்கூர் கொன்னை யாறும் பனயம்பள்ளி
சேனை நகர்க்கதிபன் செய்யபனங் காடைகுலன்
நலஞ்சிறந்த காராளன் நற்குவளை மார்பன்
குலம்மிகுந்த சோமன்எனும் குறுப்புவள நாடதிபன்.
பாண்டியன் குலம்
காணியூர்கள்:
மதுரை, நசியனூர், மானூர், பட்டாலி, கொடுமணல், வயிரூசி, காணாங்குளம், ஆத்தூர், கொங்கணாபுரம், பாலமேடு, கோட்டைக்கரை, புன்னம், மோகனூர், காவேரிபுரம், பவித்திரம், குடையூர், இடையாறு ஆகிய ஊர்கள் பாண்டியன் குலக் காணியூர்களாகும்.
மதுரை, நசியனூர், மானூர், பட்டாலி, கொடுமணல், வயிரூசி, காணாங்குளம், ஆத்தூர், கொங்கணாபுரம், பாலமேடு, கோட்டைக்கரை, புன்னம், மோகனூர், காவேரிபுரம், பவித்திரம், குடையூர், இடையாறு ஆகிய ஊர்கள் பாண்டியன் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
தண்டமிழ் துதிக்கவரு மதுரைதென் நசையனூர்
சாற்றுபுகழ் மானூருடன்
தயவுபெறு பட்டாலி கொடுமணல் வயிரூசி
தழைக்கின்ற காணாங்குளம்
மண்டலம் தனிலாத்தூர் கொங்கணா புரமுடன்
வளமுற்ற பாலைமேடு
வலுவலான கோட்டைக் கரைபுன்னம் முகவனூர்
வாய்த்தகா வேரிபுரமும்
கொண்டலுயழ் பவித்திரம் குடையூரு இடையாறு
கூறும்இவ் வூர்கள் எல்லாம்
கொற்றவர் மதிக்கஉயர் கம்பருக்கு அடிமைமுறி
ஈந்தகுண சாந்தமுடையோர்
எண்டிசை மதிக்கவே மேழிப் பதாகையுடன்
எழில்பெற்ற குவளைஉடையோர்
இந்திரன்என வந்துதவு பாண்டியகுல வேளார்
இனிதாக மிகவாழ்கவே!
இரண்டாம் காணிப்பாடல்
ஆண்டவ நல்லூர் மருதுறை செம்பத் தொழுஆரியூர்
தீண்டும் திடுமல் கொடுமணல் காஞ்சி திருவானியும்
பூண்டி பவுதையும் மானூர் மதுரை புதுவயலூர்
பாண்டியன் தன்குலத் தோர்கள் இருக்கும் பதியிவையே.
பில்ல குலம்
காணியூர்கள்:
வெங்கம்பூர், சத்தியமங்கலம், வள்ளியறச்சல், கொற்றனூர், வடகரைநாடு, சேமூர், கார்வளி, ராமதேவம், பழமங்கலம், அஞ்சூர், அனுமன்பள்ளி, குன்னமலை, இளம்பிள்ளை ஆகிய ஊர்கள் பில்லன் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வளமைமிகு வெங்கைநகர் சத்திமங் கலத்துடன்
வள்ளிநகர் கொற்றையூரும்
வடகரைசை நாடுடன் சேமூரு கார்வளி
மாதுவளர் ராமதேவம்
பழமங்கை அஞ்சியூர் அனுமநக ரும்பரவு
பாருலகில் குன்னமலையும்
பாங்கான இளம்பிள்ளை இவையெலாம் உமதுபதி
பண்பான பில்லகுலனே
அழகுபெறு முருகர்தன் பொன்னடித் தாளிணையை
அனுதினமும் மறவாதவர்
அரிவையர் தமக்குநிகர் ஆனமன் மதசீல
ஆதுலர்கள் புகழ்தூயனே
களபமணி திண்புயச் செங்குவளை மார்பனே
கங்கைகுல நலதம்பிசொல்
கண்மணிய தாகவரு மோழைமக ராசனே
கல்வெட்டும் காணிப்பாடலும்
கருதலர்கள் பணிசிங்கமே!
பூச குலம்
காணியூர்கள்:
களத்தூர், கண்டியூர், சீர்காழி, பொருளூர், மூலனூர், கோமங்கை, குகைமண்குழி, வீராட்சிமங்கலம், அல்லாளபுரம், சர்க்கார்சாமக்குளம், காவிலிபாளையம், வாய்ப்பாடி, பல்லாக்கோயில், கருவலூர், மேட்டுக்கோயில், வதம்பச்சேரி, சிறுகளந்தை, சிந்திலுப்பை, ஆனூர் ஆகிய ஊர்கள் பூசன்குலக் காணியூர்கள் ஆகும்.
முதல் காணிப்பாடல்:
தேசமது புகழ்சோழ ழண்டலம் பாண்டியன்
திரள்பெற்ற மண்டலமுடன்
திகழ்சேர மண்டலம் கொங்குடன் மற்றுள்ள
தேசதே சங்கள்தன்னில்
பூசகுல ராசர்க்கு அரசுரிமை யாகவளர்
புரிகளத் தூர்கண்டியூர்
புனிதமிகு சீர்காழி புலரியூர் மூலனூர்
புகழ்சேரும் கோமங்கையும்
வாசமது புகழ்பெற்ற குகைமண்குழி வீராட்சி
மன்னும்அல் லாளபுரியும்
மருவுசாம் பக்குளம் காவிலி பாளையம்
வண்மைபுரி வாய்நகருடன்
வீசுபுகழ் பெற்றபல் லாக்கோயில் கருவலூர்
மேட்டுக் கோயில்மிகு
வதம்பச் சேரிசிறுக் களந்தைசிந் திலுப்பைப்பதி
விளங்கும் ஆனூருமாமே.
பூசகுலத்தாரின் மற்றொரு காணிப்பாடலில் கரூர், நசியனூர், பொருளூர், பாசூர், சம்பை, பழங்கரை ஆகிய
ஊர்களும் பூசன் குலத்தார் காணியூர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
பெரிய குலம்
காணியூர்கள்:
சிவாயம், இருகாலூர், முருங்கத்தொழு, காகம், விளக்கேத்தி பாலத்தொழு, கொற்றனூர், குகைமண்குழி, ஊதியூர், சோழமாதேவி, குறிச்சி, பொம்மநல்லூர் ஆகிய ஊர்கள் பெரிய குலத்தாரின் காணியூர்கள்.
குருபரன் ஆற்றுப்படை:
போற்றும் சிவாயம் புகல்இருகா லூருடனே
சாற்றரிய தண்முருங்கைத் தண்பதியும் மாற்றமுயர்
காகம் விளக்கேத்தி கற்புசித பாலத்தொழு
யோகமிகும் கொற்றை யூருடனே பாகமுடன்
நங்கைகுகை மண்குழியும் நல்வளஞ்சேர் பொன்னூதி
தங்கமுயர் ஊதியூர்த் தன்பதியும் இங்கிதம்சேர்
சோழமா தேவியுடன் சொற்குறிச்சி எந்நாளும்
வாழுபொம்ம நல்லூர் வளநகரை ஆளவே
காணியென வந்துதித்த காண்டீபப் பெரியகுலன்.
முதல் காணிப்பாடல்:
காகம் விளக்கேத்தி கனகொற்றை மாநகர்வி
பேசு முருங்கைப் பெருந்தொழுவாம் - கோகனக
சோழமா தேவி சிவாயம்இரு காலூரு
வாழ்பெரிய கோத்திரத்தார் மண்.
இரண்டாவது காணிப்பாடல்:
கொற்றை சிவாயம் முருங்கைப் பெருந்தொழு கோகனத்தார்
சுற்றிய காகம் விளக்கேத்தி பாலத் தொழுவுடனே
நற்றமிழ்ச் சோழமா தேவி இருகாலூர் நானிலத்தில்
நிற்றம் பெரிய குலத்தோர்கள் வாழ்கொங்கு மண்டலமே!
பெருங்குடி குலம்
காணியூர்கள்:
வாங்கல், காங்கயம், புலுசைக்கரை, மணித்திடல், கடத்தூர், களத்தூர், சேலம், புடாரமங்கலம், எருக்கிலைப்பாடி,
கார்குழல், வளவநல்லூர், எருமைப்பட்டி, பீடம்பள்ளி, செவியூர், ஆரியூர், முருங்கத்தொழு, குடந்தை, திருமலை, விருப்பாட்சி,
கொன்னையாறு, கண்டகுளம் ஆகிய ஊர்கள் பெருங்குடிகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
சீர்மேவு திருவளர் வாங்கல்நகர் காங்கயம்
செய்புலுசைக் கரைநகருமாம்
செயமணித் திடல்கடத் தூர்களத் தூருடன்
சேலம் புடாரமங்கை
போர்மேவு தென்எருக் கிலைப்பாடி கார்குழல்
பெயர்வளவ நல்லூருடன்
பெருமைஎரு மைப்பட்டி அதிகபீ டம்பள்ளி
பேரான செவியூருடன்
தார்மேவு ஆரியூர் தென்முருங் கைப்பதி
தழைத்திடும் குடந்தையுடனே
தரணிபுகழ்த் திருமலை விருப்பாட்சி குன்றையார்
தருகண்ட குளமதுடனே
கார்மேவு கைத்தலன் மால்பெருங் குடிமோழை
கண்மணிய தாகவந்த
கனநல குமரதென் பிள்ளைக் குமாரனுட
கனிவுமிகு காணியிவையே.
பொருளந்தை குலம்
காணியூர்கள்:
கருமாபுரம், காடையூர், பெருமாநல்லூர், ஆதியூர், விசயமங்கலம், அமுக்கயம், பரமத்தி, புன்னம், தோடயம், ஆலாம்பாடி, ஆறுதொழு, ஏழூர், கொங்கணாபுரம், கரூர், முத்தூர், மதுரை, உறையூர், நல்லூர், பிடாரியூர், மாம்பூண்டி, மாவுரட்டி, சேமூர், தலையூர், தூரம்பாடி, பிள்ளைக்கரை ஆகிய ஊர்கள் பொருளந்தைகுலக் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல்:
ஆதிகரு மாபுரம் காடையூர் தென்பழனை
ஆதியூர் விசையமங்கை
அமுக்கயம் பரமுத்தி புன்னமது தோடயம்
ஆலாம்பாடி ஆறைஏழூர்
சோதிபெறு கொங்கணா புரம்வஞ்சி முத்தூரும்
சொக்கர்வாழ் மதுரைஉறையூர்
சுயமான நல்லூர் பிடாரியூர் மாம்பூண்டி
சொற்பொருளின் மாவுரட்டி
தாதுலவு இட்டமா நேமிசே மூருடன்
தலையூர்நல் தூரம்பாடி
தமிழ்பெற்ற பிள்ளைக் கரைக்கதிப ராகவளர்
தார்பெற்ற கொங்குவேளிர்
நீதியுள மன்னவர்கள் சிற்றம் பலத்தாரை
நினைக்கின்ற கங்கைகுலமன்
நேர்மையது தவறாத பொருளந்தை கோத்திரர்
நிலமையுடன் வாழ்கநன்றே.
இரண்டாம் காணிப்பாடல்:
திருமரபு கருமா புரம்காடை யூர்மதுரை
திங்களூர் ஆதியூரும்
திறமான குன்னத்தூர் முத்தூர் அமுக்கயம்
செயவிசய மங்கைநகரம்
திருவுலவு புன்னம் பவுத்திரம் தோழூர்
தழைத்தஆ லாம்பாடியும்
தாதவிழ் மலர்ந்தபஞ் சூளைமா விரட்டியூர்
திருபெருமா நல்லூருடன்
கருதரிய பழனியும் பிடாரியூர் பரமுத்தி
காணியென வேபடைத்தாய்
கமலமலர் அருள்வதன சென்னியங் கிரிமுருகர்
கழலிணையை மறவாதவர்
பெருமைபெறு பொருளந்தை குலதிலகன் எனவந்த
விபேகன் குழந்தைவேலன்
பெற்றகண் மணியான பழனிமலை நாயகன்
பிரபுடிக மகராயனே
பொன்னகுலம்
காணியூர்கள்:
அலகுமலை, பொங்கலூர், அங்கித்தொழு, கருதாணி, ஊதியூர், பட்டிலூர் ஆகியவை பொன்னகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
அத்திமுக வனைஈன்ற கயிலாச நாதரும்
அலகுமலை வடிவேலரும்
அழகுதென் பொங்கலூர் உமைகண்டி யம்மனும்
அங்கிநகர் கருதாணியூர்
பத்தர்புகழ் பெரியபெரு மாள்மங்கை பலதேவர்
பாருலகில் அனைவரும்
புத்ரனைய பணிக்கடன் லட்சுமக் குமாரமால்
புனிதனே பூவுலகில்
வித்வசனர் கொண்டாடும் பொங்கலூர் நாடனே
வெற்பூதி யூர்ப்பட்டிலூர்
விதரணக் கொடிமன்னர் கண்டஉத் தண்டனே
வீரவிக்ர மாதித்தனே
புத்தரவின் மணிதந்த அவிநாசி பூபதிதன்
புண்ணிய தருணகுமரா
பொன்னகுல மேருவே பெரியண மகீபனே
பூதலம் பிரக்யாதியே!
மணியன்குலம்
காணியூர்கள்:
மோகனூர், ஆரியூர், மணியனூர், பாலமேடு, முத்தூர், திங்களூர், மருதுறை, கிடாரம், நிரவியூர், மணப்பள்ளி, அயிலூர், அலகுமலை, இறையனூர், கூடலூர், பெருச்சாணி, மானூர், காரையூர், வாணியம்பாடி, விசயமங்கலம், ஏழூர், காங்கயம், எண்ணமங்கலம், மணத்திடல், கடத்தூர், வடிவுடையமங்கலம், வேம்பத்தி, ஆத்தூர், அத்திப்பாளையம், சென்னிமலை, குடந்தை, வயிரூசி,
துர்க்கைநகர் ஆகிய ஊர்கள் மணியகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
சென்னெல்செறி முகவனூர் ஆரியூர் மணியனூர்
சீர்பாலை முத்தூருடன்
திங்களூர் மருதுறை கிடாரமது நிரவியூர்
திகழ்மணப் பள்ளிஅயிலூர்
புன்னநகர் அலகுமலை இறையனூர் கூடலூர்
புகழ்பெருச் சாணிமானூர்
பேரான காரையூர் வாணியம் பாடியும்
பெருவிசைய மங்கைஏழூர்
மன்னர்வளர் காங்கயம் எண்ணமங் கலமதும்
மணத்திடல் கடத்தூருடன்
வடிவுடைய மங்கையும் வேம்பநகர் ஆத்தூர்
வடிவுடைய விதரிதனையும்
சென்னிகிரி குடந்தைவஞ் சித்துர்க்கை நகரதும்
செம்மைபெறு மணியகுலனே
செம்பபூ பதியுதவு பெரியண மகீபனே
செகமண்ட வாதிபதியே!
விலையகுலம்
காணியூர்கள்:
தலையநல்லூர், மின்னாம்பள்ளி, ஆறுதொழு, மண்மங்கை, கீரனூர், ஆரியூர், குமரமங்கலம், வடுகநகர், பஞ்சமாதேவி,
சென்னிமலை, காக்கைவாடி, முட்டுக்கோட்டை, சேலம், சிராமணி, தாழம்பாடி, இடையாறு, கொன்னையார், காளமங்கை, சாத்தனூர்,
துத்திக்குளம், பொங்கலூர், எழுகரைநாடு ஆகியவை விலையகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
பெருகுபுக ழேகொண்ட தலைசைமின் னாம்பள்ளி
பேர்பெற்ற ஆறைநகரும்
பெருமைசெறி மண்மங்கை கீரனூர் ஆரியூர்
பின்குமர மங்கலமதும்
திருவுலவு வடுகநகர் பஞ்சமா தேவியும்
சென்னிகிரி காக்கைவாடி
தொன்முட்டுக் கோட்டைமிகு சேலம் சிராமணி
சேர்தாழை இடையாறையும்
தருவுலவு கொன்னையார் காளமங்கை சாத்தனூர்
தருமமிகு துத்திக்குளம்
தண்பொங்க லூருடன் அரையநன் னாடுமே
தழைக்கவே காணிபெற்றாய்
மருவிவரும் விலையகுல பெரிச்சிபூ பாலனின்
மைந்தனே ஐந்தாருவே
மருப்புயா சலன்ஆன பெரியண்ண தீரனே
மண்டலம் பிரக்யாதியே.
வெண்டுவன் குலம்
காணியூர்கள்:
கொங்கூர், கோனூர், கூடலூர், மண்மங்கை, ஆரியூர், கத்தாங்கண்ணி, வல்லிபுரம், மூலனூர், சித்தோடு, தோக்கவாடி, நல்லூர், தாழக்கரை, காடம்பாடி, கோப்புலிநத்தம், கொல்லங்கோயில் ஆகிய ஊர்கள் வெண்டுவன்குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வைய்யாவூர் நாடுகொங் கூர்கோனூர் கூடலூர்
மண்மங்கை ஆரியூரும்
வீரசோழ நாட்டினில் கற்றாங் காணியும்
வல்லிபுரம் மூலனூரும்
மெய்யான சிற்றோடை வளர்தோக்க வாடியும்
மேன்மைபெறு நல்லூருடன்
விளங்குதா ழக்கரையும் மிக்ககா டாம்பாடி
வெற்றிகோப் புலிநத்தமும்
பொய்யாத வாய்மையுள கொலங்கோயில் இதுவெலாம்
புனிதமிகும் காணிபெற்றாய்
புகழ்பெற்ற வேண்டுவ குலதீப வசீரனே
போசனே புவிராசனே
மய்யார் விழிச்சியர்கள் மன்மதன் ராவுத்தன்
மைந்தன்என் வந்தநிருபா
மாதேவர் தான்தோன்றி அப்பாஅருள் பெற்றுமே
மாநிலம் தனில்வாழ்கவே!
காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்க் காணியாளர்கள்
திருமருவு சத்திசிவன் மலையிலுயர் முருகனைத்
தெய்வானை வள்ளியம்மையைச்
சிங்கநகர் அதனில்வளர் அதிகபெருங் குடியனை
செயவேந்தன் செங்கண்ணனைச்
சீர்கொண்ட தூரனைப் பதுமன்முதல் வாணியைத்
திவ்விய சாத்தந்தையை
தேவர்கள் புகழ்கின்ற வள்ளிநகர் வில்லியைச்
செல்லனை ஆந்தைகுலனை
செல்வவண் ணக்கனைப் பில்லனைக் கல்வியது
சேர்ந்துவளர் கண்ணந்தையை
சிங்காரப் பூந்தையைக் காடையைக் கணக்கனை
திகழ்பரவு நீருண்ணியை
சீரகத் தார்பரவு செட்டியைக் காடையூர்
சேடனைப் பொருளந்தையை
தருமமிகு பட்டாலி அதனில்வரு குருகுலன்
தாங்குசீர் கண்ணகுலனை
சம்பிரமிகு கீரனூர் தன்னில்வளர் ஆதியை
சவுரியம்மிகு அந்துவகுலனை
தன்னில்வளர் காடையைக் கீரனை விலையனை
தர்மமிகு தேவேந்திரனை
தரணிபுகழ்ப் பார்ப்பதித் தோடைகுல தீரனைத்
தந்திரமிகு கண்ணந்தையை
தனதான காடையைக் கீரன்வண் ணக்கனை
தருவாண னைச்செட்டியை
தமிழ்பரவு பரஞ்சைநகர் அதனில்வளர் பயிரனை
தனபதிச் செம்பகுலனை
தனமிகும் ஓதாளனை செட்டியை வண்ணக்கனை
தகைமையுறும் ஈஞ்சகுலனை
சவுரியமிகு விளியனை பிரமகுல மேருவை
தழைத்துவளர் ஆவகுலனை
அருமைதிகழ் ஆடையைக் கருணைதிகழ் வாணனை
அரசர்புகழ் தென்காரையூர்
அதனில்வளர் மணியனைக் கியாதியுள பயிரனை
அவனிமிசை மருதுறையில்வாழ்
அதிகபனஞ் காடையைப் புகழ்பெற்ற ஆந்தையை
அன்புமிகும் செங்குண்ணியை
அழகான முத்தூரில் வளர்கின்ற முத்தனை
அய்யமிகு மணியகுலனை
அகளங்க சேரனை தனபதிவெள் ளம்பனை
அனதான பொருளந்தையை
அமரர்தொழும் கண்ணையில் அதனில்வளர் செங்கண்ணன்
அரசுபுரி அதியனவனை
அளப்பரிய ஓதாள குலவனை நலமிகும்
ஆசைமிகும் மால்பதரியை
அன்புமிகும் கணவாள குலதீரர் தங்களை
அச்சமிகு மாவெட்டியை
அனைவர்புகழ் செட்டியை முத்தன்வண் ணக்கனை
அற்புதக் கடுந்தூளியை
மருவுவெள் ளையம்பதி யில்வளர் குருகுலனை
வாகுசேர் ஆந்தைகுலனை
வரிசைதிகழ் வில்லியைப் பிரபுடிக மாடையை
மதுரமொழி ஓதாளனை
வலிமையது சேர்கின்ற அதிகவண் ணக்கனை
மகராச யோகமருவும்
வாகுற்ற தனஞ்செயனை தேவதா னத்தில்உயர்
வண்மைசேர் ஆறுதொழுவில்
மருவுபொரு ளந்தையை முதலையம் பதியில்வளர்
மதியூகி செங்கண்ணனை
மன்னுபுகழ் ஆலநகர் தன்னிலே வளர்கின்ற
மாநிதிப் பொருளந்தையை
மற்றுமுள வர்த்தகர் முதலான செழுமையுடன்
வண்மைசேர் குடிகள்தம்மை
மதியிரவி காணளவு அதிகபுகழ் நலம்தந்து
வளம்பெறக் காக்கநன்றே!
மிக நல்லதொரு பதிவு!
ReplyDeleteஅற்பும்
ReplyDeleteமுத்தன் குலம் ஏன் பெயரிடவில்லை. முத்தூர் செல்வகுமார திருக்கோவில்
ReplyDeleteமுத்தன் குலம் காணிப்பாடல் கிடைக்கவில்லை, இது வரை 40 பாடல் மட்டுமே கிடைத்தது உள்ளது, பூலவர் ராசு முத்தன் குல வாரலற்றை எழுதி உள்ளார் , அவரிடம் இருக்கும் அல்லது முத்தன் குல குலகுரு விடம் , உள்ளா ஓலைச்சுவடில் இருக்கும் அல்லது உங்கள் குல பூலவனார் களிடம் ஓலைச்சுவடியை தேடி , அச்சில் எற்றலாம் , முத்தன் குல பழமை பற்றி blog elutha vendum
ReplyDeleteஇவற்றை இணையத்தில் சேர்ந்து எங்களுக்கு அறிவித்த அன்பர்களுக்கு வணக்கம்.தங்களிடம் சேரன் குலம் தொடர்பான ஆவணங்கள் அல்லது வறலாற்று கருத்துக்கள் இருந்தால் தயவுகூர்ந்து வெளியிடுங்கள். அல்லது 9025851728 என்ற என்னுடைய whatapp க்கு அனுப்புங்கள்... தங்கள் பணி மேலும் சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் 💚❤
ReplyDeletehttps://kongucheramanperumal.blogspot.com/2014/07/blog-post.html?m=1
Deletehttp://www.karikkuruvi.com/2017/07/blog-post_20.html?m=1
Deletehttps://kongucheramanperumal.blogspot.com/2014/07/blog-post.html?m=1
ReplyDeletehttp://www.karikkuruvi.com/2017/07/blog-post_20.html?m=1
ReplyDelete